Sun. May 19th, 2024

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் க்கும் தாலிபான்களுக்கும் இடையில் நடைபெற இருந்த இரகசிய சந்திப்பு கடைசிநேரத்தில இடைநிறுத்தப்பட்டது

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் 18 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தலிபானுடன் மேற்கொள்ள இருந்த சமாதான பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஆனால் ஒரு அமெரிக்க இராணுவ வீரர் கொல்லப்பட்டதின் பின்னணியில் தாங்கள் இருப்பதாக தலிபான் போராளிகள் ஒப்புக்கொண்டதை அடுத்து ,டேவிட் முகாமில் நடக்கவிருந்த சந்திப்பை ட்ரம்ப் நிறுத்திவிட்டார். வளைகுடா நாடான கத்தார் தலைநகரான தோஹாவில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் தலிபான் பிரதிநிதிகளுக்கு இடையேயான ஒன்பது சுற்று பேச்சுவார்த்தைகளின் விளைவாகவே இந்த இரகசிய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் திட்டமிடப்படி , ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி மற்றும் மூத்த தலிபான் தலைவர்களை சந்திக்க உள்ளதாக ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த தலிபான்கள் , சந்திப்பை ரத்து செய்ததற்காக அமெரிக்கர்கள் “அதிகம் இழப்பார்கள்” என்று கூறியுள்ளார்கள். 9/11 ஆண்டு நிறைவுக்கு சில நாட்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தை நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது .
செப்டம்பர் 11 அன்று அமெரிக்கா மீதான தாக்குதல்களைத் திட்டமிட தீவிரவாதிகள் அல்-கொய்தா வலையமைப்பிற்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியதால், அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து 2001 இல் தலிபான் அரசாங்கத்தை தூக்கியெறிந்தது.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானியின் அலுவலகம் தெரிவிக்கையில் – ஜனாதிபதி கானி , டிரம்பை கேம்ப் டேவிட்டில் தனித்தனியாக சந்தித்திப்பார் என்று தெரிவித்துள்ளது , மேலும் தலிபான்கள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் குறிப்பிட்டார் .

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்