Fri. May 17th, 2024

மெய்வல்லுநர் போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி,  மகாஜனக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அணிகள் சம்பியன்

கனிஸ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவினருக்கான மெய்வல்லுநர் போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி,  மகாஜனக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அணிகள் சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.

யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் நடாத்திய யாழ் மாவட்ட கனிஸ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவினருக்கான மெய்வல்லுநர் போட்டிகள் அண்மையில் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் கனிஸ்ட பிரிவினருக்கான போட்டிகளின் அடிப்படையில் ஆண்கள் பிரிவில் மானிப்பாய் இந்துக் கல்லூரி 8 தங்கம்,  8 வெள்ளி,  7 வெண்கலம் உட்பட 23 பதக்கங்களை கைப்பற்றி சம்பியனாகியது.
பெண்கள் பிரிவில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி 6 தங்கம்,  4 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட 14 பதக்கங்களை கைப்பற்றி சம்பியனாகியது.
சிரேஷ்ட பிரிவில் ஆண்கள் பெண்களிற்கான போட்டியில் யாழ் பல்கலைக்கழக அணி 11 தங்கம்,  14 வெள்ளி,  15 வெண்கலம் உட்பட 40 பதக்கங்களை கைப்பற்றி சம்பியனாகியது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்