Sat. Jun 29th, 2024

முதன் முதலில் தேசிய மட்ட தைக்கொண்டோ போட்டியில் யாழ் மாவட்டத்திற்கு வெண்கலம்

தேசிய மட்ட பெண்களுக்கான தைக்கொண்டோ போட்டியில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்த கே. சாணுஜா வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.

தேசிய மட்ட பெண்களுக்கான தைக்கொண்டோ போட்டிகள் நேற்று கண்டி நாவலப்பிட்டிய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் 52 கிலோ எடைப் பிரிவில் வடமாகாண பருத்தித்துறை பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த கே.சாணுஜா வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். யாழ் பல்கலைக்கழக கலைப் பிரிவு மாணவியான இவர் கடந்த வருடம் யாழ் பல்கலைக்கழகத்தின் தைக்கொண்டோ அணியின் அணி தலைவராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. யாழ் மாவட்டத்திற்கு தைக்கொண்டோ போட்டியில் கிடைத்த முதலாவது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்