Mon. May 20th, 2024

முகக் கவசத்தை எவ்வாறு அணிவது எவ்வாறு பயன்படுத்துவது

முகக் கவசத்தை எவ்வாறு அணிவது எவ்வாறு பயன்படுத்துவது எவ்வாறு அகற்றுவது மற்றும் பாதுகாப்பான முறையில் எப்படி அப்புறப் படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது

முகமூடியை அணிய முன்னர் கைகளை அற்ககோல் கொண்ட திரவத்தினால் சுத்தம் செய்யுங்கள் அல்லது சவர்க்காரம் கொண்டு கழுவுங்கள்

வாயையும் மூக்கையும் முகமூடியால் மூடுவதுடன் முகத்திற்கும் முகமூடிக்கும் இடையில் இடைவெளி இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

முகமூடியை பாவிக்கும் போது அதை தொடுவதை தவிருங்கள் அவ்வாறு தொட நேர்ந்தால் கைகளை அற்ககோல் கொண்ட அல்லது சவர்க்காரம் கொண்டு சுத்தம் செய்யுங்கள்

ஈரமான முகமூடியை இயன்றளவு விரைவாக மாற்றுங்கள் அத்தோடு ஒற்றைப் பயன்பாடுள்ள முகமூடிகளை மீள உபயோகிக்காதீர்கள்

முகமூடியின் முன்புறத்தை தொடாது முகமூடிகளை சைற் பகுதியிலிருந்து  பாதுகாக்க அகற்றுங்கள் உடனடியாக மூடிய குப்பைத் தொட்டியில் போடுங்கள் கைகளை அற்ககோல் கொண்ட திரவத்தால் சுத்தம் செய்யுங்கள் அல்லது சவர்க்காரம் கொண்டு கழுவுங்கள்

முகக் கவசம் மட்டும் அணிவது உங்களை கொவிட் 19 லிருந்து பாதுகாக்காது முகக்கவசம் அணிந்திருந்தாலும் கூட குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளியை ஏனையவர்களிடமிருந்து பேணுங்கள் அத்தோடு கைகளை முழுமையாக சவர்க்காரம் கொண்டு அடிக்கடி கழுவுங்கள் என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்