Fri. May 17th, 2024

மீண்டும் ஒரு கிரகணம்  , இன்று சந்திரகிரகணம்  பார்க்கும் அரிய வாய்ப்பு 

இந்த ஆண்டு மட்டும் 4 முறை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதில் முதல் கிரகணம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10.37 மணி முதல் நாளை அதிகாலை 2.42 மணி வரை நிகழ்கிறது.
இந்த சந்திர கிரகணத்தை இலங்கையின் அனைத்து பகுதி மக்களும் வெறும் கண்ணால் பார்க்க முடியும். மேலும் ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களை சேர்ந்த பல்வேறு நாட்டினரும் கிரகணத்தை பார்க்கலாம் என வானியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இது பெனும்ப்ரல் வகை கிரகணம் என்பதால் இது முழுமையான சந்திர கிரகணமாக இருக்காது என்றும் இதனால் முழுமையான சந்திர கிரகண அனுபவத்தை பெற முடியாது என அவர்கள் கூறியுள்ளனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்