Sun. May 19th, 2024

மாவட்டம் தோறும் கோரோனோவை கட்டுப்படுத்த இராணுவ அதிகாரிகள் நியமனம்

COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பணியை நாடு முழுவதும் ஒருங்கிணைப்பதற்கான அவசரத் தேவையை கருத்தில் கொண்டு இன்று முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் இருபத்தைந்து மூத்த இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

COVID -19 தொற்றை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் (NOCPCO) தலைவரான இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் கீழ் ஜனாதிபதி செயலகம் இந்த நியமனம் செய்துள்ளது.

அதன்படி, அந்த தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் புதிய அலுவலகம் மாவட்ட வாரியான தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை சீராக நடத்துவதற்கும், தனிமைப்படுத்துவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் தனிநபர்களின் போக்குவரத்து, மருத்துவம், உபகரணங்கள், உலர்-ரேஷன்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற தொழில்நுட்ப தேவைகள் போன்றவற்றை நெறிப்படுத்தும் நேரு அறிவிக்கப்பட்டுள்ளது

இராணுவத்தளபதி சவேந்திர ஜெனரல் சில்வா அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 25 தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை இன்று காலை இராணுவத் தலைமையகத்தில் வழங்கினார்.
இதன்படி வடக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் விபரம்,

Northern Province

1. Major General W G H A S Bandara – Jaffna

2. Major General K N S Kotuwegoda – Kilinochchi

3. Major General R M P J Rathnayaka – Mullaittivu

4. Major General W L P W Perera – Vavuniya

5. Major General A A I J Bandara – Mannar

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்