Fri. Jun 28th, 2024

மாகாண மட்ட நீச்சல் 66 பதக்கங்களை குவித்து யாழ் மாவட்டம் சாதனை

மாவட்டங்களுக்கு இடையிலான மாகாண மட்ட நீச்சல் போட்டியில் யாழ் மாவட்டம் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 66 பதக்கங்களை கைப்பற்றி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்து சாதனை படைத்துள்ளனர்.
மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான மாகாண மட்ட நீச்சல் போட்டி நேற்றும் இன்றும்  கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் நடைபெற்றது.
இதில் யாழ் மாவட்டம் ஆண்கள் பிரிவில் 15  தங்கப் பதக்கங்கள் 10 வெள்ளி பக்கங்கள்  14 வெண்களம் வெண்கல பதக்கங்கள் உட்பட 39 பதக்கங்களையும், பெண்கள் பிரிவில் 12 தங்கப் பதக்கங்கள், 8 வெள்ளி பக்கங்கள், 7 வெண்கல பதக்கங்கள் உட்பட 27 பதக்கங்களையும் கைப்பற்றி சம்பியன் கிண்ணத்தையும்,
கிளிநொச்சி மாவட்டம் ஆண்கள் பிரிவில் 2 தங்கப் பதக்கங்கள் 6 வெள்ளிப் பதக்கங்கள், 1 வெண்கல பதக்கம் உட்பட 9 பதக்கங்களையும்,
பெண்கள் பிரிவில்
3 தங்கப் பதக்கங்கள் 7 வெள்ளிப் பதக்கங்கள் 2 வெண்கல பதக்கங்கள் உட்பட 12 பதக்கங்களையும் பெற்று இரண்டாம் இடத்தையும்,
முல்லைதீவு மாவட்டம் ஆண்கள் பிரிவில் ஒரு வெள்ளிப் பதக்கத்தை பெற்று மூன்றாம் இடத்தையும்,
மன்னார் மாவட்டம்
ஆண்கள் பிரிவில் ஒரு வெண்கல பதக்கத்தை பெற்று நான்காம் இடத்தையும் பெற்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்