Sun. May 19th, 2024

மஹிந்த ராஜபக்ச பிரதமராக சற்று முன்னர் பதிவிப்பிரமாணம்

இலங்கையின் புதிய பிரதமராக பொடுஜன பெரமுனா (எஸ்.எல்.பி.பி) கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன் பதவியேற்றார்.

அவர் இன்று (09) களனி ரஜமகா விகாரையின் புனித இடத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ முன் பதவியேற்றார்.

மஹிந்த ராஜபக்ஷ பிரதம மந்திரி பதவியைப் பெறுவது இது நான்காவது முறையாகும்.

குருணாகலவிலிருந்து 2020 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ 527,364 வாக்குகளைப் பெற்று மாவட்ட மட்டத்திலும், தேசிய அளவிலும் முன்னுரிமை வாக்குகளில் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்