Tue. May 14th, 2024

மருத நாயகம் படத்தின் ஹீரோ யார்

கமலின் ஒஸ்கார் விருதுக்கான கனவுப் படமான மருத நாயகத்தில் கமல் நடிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1997ம் ஆண்டு கமலினால் பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்ட படம் மருத நாயகம். இத்திரைப்படத்தின் சில காட்சிகள் மாத்திரம் எடுக்கப்பட்ட நிலையில் சர்வதேச அளவிலான சந்தை விநியோகம் மற்றும் பட்ஜெட் என்பவற்றைக் கொண்டு தடைபட்டது.
சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் இதனை எடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் நடவடிக்கைகளில் தான் இறங்கியுள்ளதால் மருத நாயகம் படத்தில் நடிப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 20 வருடங்கள் கடந்திருப்பதால் நடிகர்களின் தோற்றம் மாறியிருக்கும் என கேட்டதற்கு முதல் 30 நிமிடக் காட்சிகள் எடுத்து விட்டேன். இனி 12 வருடங்களுக்கு பின்னர் காட்சி தொடர்வதாகவே கதை நகர்கிறது. இதனால் நடிகர்களின் தோற்றம் பற்றி கவலைப்பட தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.
தற்போது கமல் இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் இந்தியன் இரண்டாம் பாகம் நடித்து வருகிறார்.
மருத நாயகம் படத்தின் ஹீரோவாக விக்ரம் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்