Thu. Jun 13th, 2024

மன்னார் மாவட்டத்தில் மெசிடோ நிறுவனத்தினால் விசேட நிவாரண பணி

கொவிட் 19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக மன்னார் மாவட்டத்திலுள்ள நானாட்டான் மாந்தை மன்னார் நகர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மிகவும் வறுமைக்கு உட்பட்ட சுமார் 200 குடும்பங்களுக்குத் தேவையான உலர் உணவு பொதிகள் இன்றைய தினம் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழுத் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.
 
மன்னார் மாவட்ட செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்ட தேவையுடைய கிராமங்களின் விபரங்களிம் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான சுமார் 2500 ரூபாய் பெறுமதியான அரிசி மா தேயிலை அங்கர் உட்பட அத்தியாவசிய பொருட்கள் மேற்படி வழங்கப்பட்டது.
 
குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகள் மாற்றாற்றல் உடையோர் ,முன்னால் போராளிகள், அதிகளவில் உள்ள் மாந்தை இந்தியன் வீட்டுத்திடம் பகுதியை சேர்ந்த 68 குடும்பங்களுக்கும் நானாட்டன் பகுதியை சேர்ந்த 100 குடும்பங்கள் உள்ளடங்களாக 200 குடும்பங்களுக்கு இன்றைய தினம் நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்