Fri. May 17th, 2024

மன்னாரில் வீடுகளில் முடங்கிய மக்கள்-மாவட்ட மக்களின் இயல்பு நிலை பாதீப்பு.

நாடு முழுவதும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய  ‘கொரோனா வைரஸ்’ தாக்கம் தற்போது இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மன்னார் மாவட்ட மக்களின் இயல்பு நிலை பாதீக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் மக்களுக்கு வழங்கிய அறிவூறுத்தல்களுக்கு அமைவாக மக்கள் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்று (17) செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்ட மக்களின் இயல்பு நிலை முழுமையாக பாதீக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மக்கள் வெளி இடங்களுக்கு மேற்கொள்ளும் பிரையாணங்களை குறைத்துள்ளனர்.
போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சந்தை, பஸார் பகுதி உற்பட பொது இடங்களில் மக்களின் வருகை குறைவடைந்த நிலையில் உள்ளது.
அரசாங்கத்தினால் அறிவூறுத்தப்பட்ட அரச திணைக்களங்கள், வங்கிகளை தவிர ஏனைய அரச தனியார் நிறுவனங்கள் இன்றைய தினம் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்