Fri. May 17th, 2024

மன்னாரில் விபத்தில் படுகாயமடைந்த அரச உத்தியோகத்தர் பலி

மன்னார் தள்ளாடி சந்தியில் கடந்த 13 ஆம் திகதி இடம் பெற்ற விபத்தில்   படுகாயமடைந்து யாழ் போதானா வைத்தியசபலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் மாவட்டச் செயலகத்தின் புள்ளி விபர திணைக்களத்தின் தகவல் தொழில் நுற்ப உத்தியோகத்தராக கடமையாற்றிய வவுனியாவை சேர்ந்த தனபாலசிங்கம் நிஸாந்தன் (வயது-30) சிகிச்சை பலன் இன்றி நேற்று செவ்வாய்க்கிழமை(24) உயிரிழந்தார்.
மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக சென்ற டிப்பர் வாகனமும், திருக்கேதீஸ்வரம்- தள்ளாடி பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் கைக்கிளும் தள்ளாடி சந்தியில் கடந்த 13 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை காலை சுமார் 8.15 மணியளவில் மோதி விபத்திற்கு உள்ளாகியதில் மோட்டார் சைக்கிலில் மன்னார் நோக்கி வந்த குறித்த நபர் படுகாயம் அடைந்தார்.
குறித்த நபர் கடமையின் நிமித்தம், திருக்கேதீஸ்வரம்- தள்ளாடி பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிலில் வந்து கொண்டிருந்த போது, மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக சென்ற டிப்பர் வாகனத்துடன் தள்ளாடி சந்தியில் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதன் போது குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
-இந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 11 தினங்களாக அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நபர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை(24) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்