Tue. May 14th, 2024

மன்னாரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க  வேதசாட்சிகள் அன்னை ஆலயத்தில் விசேட பிரார்த்தனை

மன்னார் மறைமாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க  வேதசாட்சிகள் அன்னை ஆலயத்தில் மன்னார்  மறைமாவட்ட ஆயர் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை   விசேட பிரார்தனை வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மனுவல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ‘கொறோனா’ கொடிய நோய் தாக்கம் நீங்கவும் வைத்தியம் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்தவர்களுக்கு நற்சுகம், இறை ஆசிர் கிடைக்கவும் விசேட பிரார்தனை கூட்டுத்திருப்பலி வேதசாட்சிகள் அன்னை ஆலயத்தில் இடம் பெற்றது.
நற்கருணை ஆராதனை திருப்பலி அன்னையின் திருச்சூரூப ஆசீர்வாதம் என்பன இடம் பெற்றது.
விசேட பிரார்தனை திருப்பலி என்பன மும்மொழிகளிலும் இடம் பெற்றதுடன் குறித்த ஆலயம் அமைந்த பகுதியில் 1544ஆம் ஆண்டு கிறிஸ்தவ விசுவாச வாழ்கை வாழ்ந்த சுமார் 600 கிறிஸ்தவர்கள் வேதசாட்சிகளாக கொல்லப்பட்ட இடமாகவும் கத்தோலிக்க திருச்சபையின் புனித யாத்திரைத்தளமாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்