Thu. May 16th, 2024

மன்னாரில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களின் கருத்து தொடர்பாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தமது கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு,அக்கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா இன்று மன்னாரில் ஊடன சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
இதன் போது அக்கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா  ; ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களின் கருத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
உண்மையிலேயே சுமந்திரன் அவர்கள் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்திருந்தார். ஆயுதப் போராட்டம் என்பது எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் வந்து   ஆரம்பித்தது தவறா , சரியா என்று சொல்லி ஒரு சிங்கள ஊடகத்தில் கேள்வி எழுப்பும் போது அவர் வந்து அது முற்றிலும் தவறான விடயம் என்  சுட்டிக் காட்டி சுமந்திரன் அவர்கள் சொல்லி இருக்கின்றார்.
 உண்மையிலேயே இவ்வாறான 30 வருட ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி அது மட்டுமன்றி தனது 30 வருட காலத்தில் நடந்த ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஆனால் அந்த இழப்புக்கு 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்கள் மட்டுமன்றி 3 இலட்சத்துக்கும்  மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
 ஆயுத போராட்டத்தை நோக்கி வந்து முன்னோர்களே அந்த நேரத்திலேயே இந்த ஆயுதப் போராட்டத்துக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட காரணம்   எமது தேசியத் தலைவர் அவர்களால் இந்த ஆயுதப் போராட்டத்தில் நிர்ப்பந்திக்கப்பட்ட காரணம் நமது முன்னோர்கள் வந்து விட்ட தவறுகள் அவர்கள் வந்து சமாதான வழியில் மக்கள் பிரச்சினையை இந்த நாட்டிலே முன்னெடுத்துக் கொண்டு வந்தவர்கள்.என தெரிவித்தார்.

 

 

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்