Wed. May 22nd, 2024

மன்னாரில் திடீர் சோதனை நடவடிக்கை- 5 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று வெள்ளிக்கிழமை (27) காலை தளர்த்தப்பட்டுள்ள நிலையில்   மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களினால் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் இரகசிய சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின் போது 5 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்   இன்று (27) வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில்    மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன் போது மக்களின் நலநன கருத்தில் கொண்டு  மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களினால் மாவட்டத்தில் இன்றைய தினம்(27)  வெள்ளிக்கிழமை மன்னாரில் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த   வர்த்தக நிலையங்கள் திடீர் இரகசிய சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதன் போது அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யாது பதுக்கி வைத்திருந்த, கட்டுப்பாட்டு விலைகளை மீறி விற்பனை செய்த மற்றும் குறிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள்  ஐந்து பேரூக்கு (5) எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னாரில் அமைந்துள்ள பிரதான வர்த்த நிலையங்கள் ,சதோச, காகில்ஸ் புட்சிட்டி, மருந்தகங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள் போன்றவற்றில்  மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களினால் இன்றைய தினம் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்