Tue. May 14th, 2024

மன்னாரில் காவல்துறை ஊரடங்கு தளர்தப்பட்ட போதும் மக்களின் நடமாட்டம் குறைவு

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (28) காவல்துறை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட போதும் மக்களுடைய நடமாட்டம் காலை நேரத்தில் சற்று அதிகரித்து காணப்பட்ட போதும் பின்னர்  மிகவும் குறைவாகவே காணப்பட்டது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை  நாடளாவிய  ரீதியில் குறித்த சில மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்பட்ட போதும் அதிக எண்ணிக்கையான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வில்லை.
பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் மக்கள் ஆர்வம் காட்டாமையையும் அவதனிக்கக் கூடியதாக இருந்தது.
மரக்கறி உற்பத்திகளின் விலை குறைவாக காணப்பட்டமையினால் மக்கள் அதிகளவில் மரக்கறி  கொள்வனவில் ஈடுபட்டனர்.
அத்துடன் அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவுக்கு மக்கள் என வெளியே  வருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
 அதே நேரத்தில் அனைவரும் சமூக இடை வெளியை பின் பற்றியும்  முகக் கவசங்கள் அணிந்தும் சுகாதார முறைகளை பின் பற்றியமை குறிப்பிடதக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்