Sat. May 18th, 2024

போாினால் அழிக்கப்பட்ட எங்களை, இப்போது யானைகள் அழிக்கின்றன!

போாில் பிள்ளைகளை இழந்து, சொத்துக்களை இழந்து, தள்ளாத வயதிலும் உழைத்து வாழ நினைக்கும் நிலை யில் யானைகளால் தினசாி எம் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறு நெடுங்கேணி- ஒலுமடு கிராமத்தை சோ்ந்த வை.பூபாலசிங்கம் என்ற 70 வயதான முதியவா் கூறியிருக் கின்றாா். இது குறித்து அவா் மேலும் கூறுகையில்,

நெடுங்கேணி ஒலுமடுப் பகுதியில் வசிக்கும் நான் எமது வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தையே நம்பியுள்ளேன். இந்த நிலையில் வீட்டு வளவிற்குள் புகுந்த யானைக் கூட்டம்

வாழ்வாதாரத்திற்காக நாட்டப்பட்டிருந்த ஆயிரம் கண்டு மரவெள்ளியை முழுமையாக நாசம் செய்த்தோடு தற்போது காய்க்கும் 5 தென்னம் பிள்ளைகளையும் அடியோடு சாய்த்துள்ளது.

இதன் காரணமாக வாழ்வாதாரமே கேள்விக்குரியாகியுள்ளது. இவ்வாறு எமது வருமானத்தை அழிக்கும் யானைகளை கட்டுப்படுத்த யானைவேலி அமைத்து தருமாறு 10 வருடமாக கோருகின்றோம்.

ஆனால் ஒரு முன்னேற்றமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை யாரோடு நோவோம் யார்க்கெடுத்து உரைப்போம் என ஏக்கத்துடன் தெரிவித்தார்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்