Wed. May 15th, 2024

பொலிஸாரால் அடித்து கொல்லப்பட்ட இளைஞன்! கண்கண்ட சாட்சிக்கு உயிா் அச்சுறுத்தல்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதையின் பின் கொலை செய்யப்பட்ட சுமண ன் என்பாின் கொலையில் கண்கண்ட சாட்சிக்கு உயிா் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடா்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்தியஅலுவலகம் மற்றும் சுன்னாகம் பொலிஸ்நிலையத்தில் இந்த முறைப்பாடுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளான சாட்சியான

லோகஸ்வரன் என்பவரால் வழங்கப்பட்டுள்ளன.இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. வழக்கின் 5ஆவது எதிரியான

வீரசிங்க தொரயலாகே ஹேமசந்திர வீரசிங்க நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிறைச்சாலையில் உயிரிழந்தால் அவரைநீக்கி புதிய குற்றப்பத்திரம் தாக்கல்செய்வதற்காக வழக்கு

வரும் டிசெம்பர் 06ஆம் திகதி வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கின் முக்கிய சாட்சியான லோகேஸ்வரன் என்பவருடைய சுன்னாகத்திலுள்ள வீட்டுக்கு

கடந்த 31ஆம் திகதி இரவு 11 மணியளவில் 2 மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேர்  அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர் என்று முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 31ஆம் திகதி இரவு 11 மணியளவில் வீட்டு வாசலில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் வீட்டின் படலையில் அடித்து அச்சுறுத்தும் தொனியில்

குரல் எழுப்பினர். அவர்கள் நால்வரும் முகத்தில் துணியால் கட்டியிருந்த்துடன், மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகளையும் துணியால் கட்டி மறைத்திருந்தனர். நான் வெளியே வந்த போது, அவர்கள் தப்பித்துவிட்டனர்.

சம்பவம் இடம்பெற்ற போது எனது வீட்டிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் பொலிஸார் கடமையில் இருந்தனர் என்று லோகேஸ்வரன் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்