Fri. May 17th, 2024

பெண்களிற்கான வலைப்பந்தாட்டப் போட்டியில்  சங்கானை பிரதேச செயலக அணி சம்பியன்

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான பெண்களிற்கான வலைப்பந்தாட்டப் போட்டியில்  சங்கானை பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான பெண்களிற்கான வலைப்பந்தாட்டப் போட்டிகள் யாழ்  கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் சங்கானை பிரதேச செயலக அணியை எதிர்த்து தெல்லிப்பளை பிரதேச செயலக அணி மோதியது. நான்கு கால்பகுதிகளாக நடைபெற்ற ஆட்டத்தில் சங்கானை பிரதேச செயலக அணி முதலாவது கால் பகுதியாட்டத்தில் 14:8 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தனர். இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இதில் சங்கானை பிரதேச செயலக அணி 24:22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தனர். ஆனால் மூன்றாவது கால் பகுதியில் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய சங்கானை பிரதேச செயலக அணி 35:28 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தனர். வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் நான்காவது கால்பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தினர். இதில் சங்கானை பிரதேச செயலக அணி 43:41 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்