Sun. May 19th, 2024

பிரான்சில் இருந்து காரில் இங்கிலாந்து வந்த தம்பதி , கார் கூரை பெட்டியை திறந்தபோது அதிர்ச்சி

பிரான்சில் இருந்து திரும்பிய ஒரு தம்பதியினர், தங்கள் கார் கூரை பெட்டியில் புலம்பெயர்ந்த இளைஞர் ஒருவர் மறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததுள்ளார்கள்
பெர்க்சயரின் நியூபரி நகரைச் சேர்ந்த சைமன் ஃபென்டன் மற்றும் அவரது மனைவி சாலி ஆகியோர் சனிக்கிழமையன்று பிரான்சின் கலீஸிலிருந்து பிரித்தானியாவில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்றனர். பின்னர் கூரை பெட்டியில் ஒளிந்திருந்த 17 வயது சிறுவனைக் கண்டு ஆச்சரியம் அடைந்ததாக கூறினார். உடனடியாக தேம்ஸ் வலி பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து குடிவரவு குற்றங்களை மீறிய சந்தேகத்தின் பேரில் 17 வயது இளைஞனை கைது செய்யதார்கள் .

 

“கலீஸிலிருந்து அந்த இளைஞன் ஒளிந்து வந்திருப்பதை நினைத்தால் மிகவும் ஆச்சரியமாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்
பிரான்சின் டார்டோக்னில் விடுமுறைக்கு வந்திருந்த இந்த தம்பதியினர் வெள்ளிக்கிழமை இரவு கலாய்ஸில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
ஹோட்டல் கார் நிறுத்துமிடத்தில் காரின் கூரைப்பெட்டியுடன் நிறுத்தமுடியாததால் தங்கள் காரை தெருவில் நிறுத்தியிருந்தனர். பின்னர் ஃபென்டன்ஸ் வீடு திரும்புவதற்கு முன்பு, கலீஸிலிருந்து டோவர் வரை பெர்ரியில் வந்து பின்னர் தங்கள் வீட்டை வந்தடைந்திருந்தனர்.

 

 

 

ஒளிந்திருந்த இளைஞன் எகிப்து நாட்டை சேர்ந்தவன் என்றும் காரின் கூரை பெட்டியில் இருந்த தங்களது உடமைகளை தூக்கியெறிந்துவிட்டு அதனுள் ஒளிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்

உண்மையில் அந்த இளைஞன் மீது எனக்கு நிறைய அனுதாபங்கள் உள்ளன, எங்கள் நாட்டிற்குள் நுழைந்ததற்காக நான் அவரிடம் கோபப்படவில்லை , இது ஒரு அதிர்ச்சியாக இருந்தது, நீண்ட காலமாக எங்கள் நரம்புகள் வழியாக அவ்வளவு அட்ரினலின் பாயவில்லை என்று கூறிய ஃபென்டன்ஸ் இந்த விசாரணையை இப்போது குடிவரவு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தேம்ஸ் வலி போலீசார் தெரிவித்தனர்.
ஒரு எகிப்திய இளைஞன் என்று அவர்களிடம் குறிப்பிடப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் உறுதிப்படுத்தியது, இப்போது இளைஞனின் வயது காரணமாக சமூக சேவைகளின் பராமரிப்பில் உள்ளார் என்று ஃபென்டன்ஸ் தெரிவித்தார்..

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்