Sun. May 19th, 2024

பிரதமருக்கும் மாலைதீவு ஜனாதிபதிக்குமிடையில் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்து ..

பிரதமர் தலைமையிலான குழு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மாலைதீவில் நடாத்தியுள்ளது

இந்நிலையில், பிரதமருக்கும் மாலைதீவு ஜனாதிபதிக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை திங்கட்கிழமை நடைபெற்றதோடு முக்கிய நான்கு ஒப்பந்தங்களும் கைசாத்திடப்பட்டுள்ளன.

இது தவிர இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய புதிய துறைகள் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் ஆராய்ந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

பிரதமர் தலைமையிலான குழுவில் பிரதமரின் பாரியார் மைத்ரி விக்கிரமசிங்க, அமைச்சர்களான வஜிர அபேவர்தன, ரவூப் ஹக்கீம், தயா கமகே, இராஜாங்க அமைச்சர் அனோமா கமகே, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் அசோக்க தோரதெனிய, பிரதமரின் விசேட உதவியாளர் சென்ட்ரா பெரேரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

விசா வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர ​அபேவர்தனவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சரும் கைச்சாத்திட்டனர்.

அத்துடன் உயர்கல்வி மற்றும் நீர்வழங்கல் தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தத்தில் உயர்கல்வி மற்றும் நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் மாலைதீவு உயர்கல்வி அமைச்சர் இப்ராஹிம் ஹசனும் கைச்சாத்திட்டனர்.

மேலும் சமூக பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே மற்றும் மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

தொழில்பயிற்சி மற்றும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகள் தோரதெனிய மற்றும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்