Fri. May 17th, 2024

பளுதூக்கும் போட்டியில் சர்வதேச வீராங்கனை விஜயபாஸ்கர் ஆஷிகாவிற்கும் மறுப்பு 

யாழ் மாவட்ட சர்வதேச வீராங்கனை விஜயபாஸ்கர் ஆஷிகாவிற்கும் பளுதூக்கல் போட்டியில் பங்கு பற்றுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. யாழ் மாவட்ட பளுதூக்கும் சங்கத்தின்  தன்னிச்சையாக இயங்கும் செயற்பாட்டை கட்டுப்படுத்துமாறு விளையாட்டு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கும்  பளுதூக்கும் கழகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு  அழைப்பு விடாமல் யாழ் மாவட்ட பளுதூக்கும் சங்கம் நடாத்தும் போட்டி விளையாட்டை குந்தக நிலைக்கு இட்டுச்செல்லும் செயற்பாடு என விளையாட்டு ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
யாழ் மாவட்ட பளுதூக்கும் சங்கம் நாளை ஞாயிற்றுக்கிழமை கொக்குவிலில் பகுதியில் பளுதூக்கும்  போட்டிகளை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை பளுதூக்கல் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட யாழ் பளுதூக்கும் கழக மாணவர்களுக்கான விண்ணப்ப படிவங்கள் அனுப்பப்படாது குறிப்பிட்ட சில கழகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் மட்டும் விண்ணப்ப படிவங்கள் அனுப்பப்பட்டு போட்டிகள் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 30ற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகளை தவிர்த்து ஒரு சிலருக்கு மாத்திரம் போட்டிகளை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய மட்ட  திறந்த வயதுப் பிரிவினருக்கான போட்டியில் யாழ் மாவட்ட  வீர வீராங்கனைகள் சாதித்தனை படைத்து வரும் நிலையில் இச்செயற்பாடு விளையாட்டு ஆர்வலர்கள் இடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக யாழ் பளுதூக்கும் கழக தலைவர் விஜயபாஸ்கர் கருத்து தெரிவிக்கையில்,
எமது கழகத்தில் 30ற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.  எங்களில் பல சர்வதேச  தேசிய வீரர்கள் உள்ளனர். பளுதூக்கும் போட்டிகள் யாழ் மாவட்டத்தில் நடாத்துவது குறைவு. இதனால் நேரடியாக தேசிய மட்ட போட்டிகளில் கலந்து கொள்வதனால் வாய்ப்புகள் சில மாணவர்களுக்கு கிடைப்பது குறைவு.  இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் பளுதூக்கலை வளர்க்க வேண்டும் என நினைக்கும் யாழ் மாவட்ட பளுதூக்கும் சங்கமே கழகங்களை போட்டியில் பங்கு பற்றுவதற்கான ஏற்பாடு செய்யாமை வேதனைக்குரிய விடயமாகும். மற்றும் எமது கழகம் யாழ் மாவட்ட பளுதூக்கும் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டியில் கடந்த 2016ம் ஆண்டு ஆண்டிலிருந்து பங்கு பற்றி கழக சம்பியனாகியமையும் குறிப்பிடத்தக்கது என குறிப்பிட்டார்.
பாடசாலை மாணவர்களுக்கு போட்டி நடாத்துவதாயின் வடமாகாண கல்வி திணைக்களத்தின் அனுமதி பெறப்படல் வேண்டும்.  ஆனால் சங்கத்தினரால் வடமாகாண கல்வி திணைக்களத்தின் அனுமதி பெறப்படாமல் அழைக்கப்பட்ட சில பாடசாலைகளுக்கு மாத்திரம் அழைப்பு விடப்பட்டு போட்டிகளை நடாத்துவதற்கான விண்ணப்ப்படிவங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வி திணைக்களம் மற்றும் வடமாகாண அதிகாரிகள் கவனமெடுக்குமாறும் விளையாட்டு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்