Fri. May 17th, 2024

பலாலி விமான நிலையம் ”யாழ்ப்பாண் சா்வதேச விமான நிலையம்” என பதிவு.

யாழ்.பலாலி விமான நிலையத்தை “யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையம்” என சிவில் போக்குவரத்து விமா னசேவைகள் அமைச்சு பதிவு செய்துள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்ப்பித்த பரிந்துரை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,.

3 கட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் சர்வதேச விமானங்களை இயக்குவதற்கு,

அனுமதி அளித்துள்ள சர்வதேச வான் போக்குவரத்து சங்கம், தனித்துவமான குறியீட்டான JAF என்பதையும், (IATA code JAF) வழங்கியுள்ளது.

அத்துடன் சர்வதேச சிவில் விமான அமைப்பு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான குறியீட்டை (ICAO)&VCC என வழங்கியுள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கான விமான சேவைகள் இந்த மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்