Fri. May 17th, 2024

நெல்லியடி சந்தையில்  பெப்ரவரி 1ம் திகதியிலிருந்து  பொலித்தீன் பாவனைக்கு தடை

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட நெல்லியடி சந்தையில் பொலித்தீன்  பாவனையை தடுப்பதற்கு நேற்று சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மரக்கறி வியாபாரிகள் மற்றும் உழவர்களுக்கான கலந்துரையாடல் இன்று  வெள்ளிக்கிழமை கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கரவெட்டி பிரதேச செயலர், நெல்லியடி பொலீஸ் பொறுப்பதிகாரி , சுகாதார பரிசோதகர்கள்,  கிராமசேவகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ஐங்கரன் அவர்களில் பொலித்தீன் பாவனையை தடுப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்டது. அதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து எதிர்வரும் 1ம் திகதியிலிருந்து நெல்லியடி சந்தையில் பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன். அதற்கான மாற்று ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்