Sat. May 18th, 2024

நெல்லியடியில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டம்

05.02.2021.இன்று காலை நெல்லியடி நகரில் அமைந்துள்ள கல்யாண மண்டபத்தில் சிவில் பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது. நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோணாரா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. பிரதம விருந்தினராக காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் W.P.J.சேனதீப கலந்து கொண்டார்.   கரவெட்டி மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் கிராம சேவையாளர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.  நெல்லியடி பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை அதிகமாக இருப்பதாகவும், சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியவர், குறிப்பாக களவுகள் அதிகரித்திருப்பதாகவும் கள்ளமண் எற்றுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் தெரிவித்த சேனதீப, மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் தேவையற்ற முறையில் சுற்றித் திரிவதாகவும்  பாடசாலை மாணவர்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவதாகவும் தங்களுக்கு தகவல்கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றது என்றும் கூறினார். இவர்களை இனங்கண்டு சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்தார்.  பொதுமக்கள் படும் கஷ்டங்கள் தனக்கு நன்கு தெரியும் எனவும் மக்களுக்கு உதவி செய்வதற்கு எந்த நேரமும் தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் மேலும் அவர் உரையில் தெரிவித்தார்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்