Tue. Jun 18th, 2024

நீர் வளத்தை பாதுகாப்போம் எனும் கருப்பொருளிலான கருத்தரங்கு

வடமராட்சி அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையில் உலக சுற்றாடல் தினம் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 9 மணிக்கு உயர்தர மாணவர்களுக்கான நீர் வளத்தை பாதுகாப்போம் எனும் கருப்பொருளிலான கருத்தரங்கு வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் வாழ்த்துரையை வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலன் அவர்களும், வளவாளர்களாக சுவீடன் விவசாய அறிவியல் பல்கலைக்கழக சூழல் தொடர்பாடவியல் துறை தகைநிலை பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா ஐக்கிய அமெரிக்கா புவியியல் துறை பேராசிரியர் முருகேசு சிவபாலன், தேசிய நீர் வழங்கல் பிராந்திய முகாமையாளர் வேலாயுதம் உதயசீலன், இளம் நீர் துறமையாளர் யோகராஜா ஷர்மிக் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்