Wed. May 15th, 2024

நாளை இயங்கவுள்ள நீதிமன்றங்கள்

உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் தவிர அனைத்து நீதிமன்றங்களும் உள்ளக நிர்வாகப் பணிகளை நாளை (20/4) முதல் ஆரம்பிக்கவுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட வழக்குகளின் புதிய திகதிகளை நிர்ணயிப்பதும் இதன்போது இடம்பெறும்.

அனைத்து உத்தியோகத்தர்களும் பணிக்கு திரும்பலாம் என்றும், ஊரடங்கு உத்தரவுள்ள பகுதிகளில் தங்கள் உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வணிக உயர் நீதிமன்றங்கள், சிவில் மேல்முறையீட்டு நீதிமன்றங்கள், மேல் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மீள இயங்க ஆரம்பிக்கின்றன.

கொரொனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்ட வழக்குகளிற்கு புதிய திகதிகளை வழங்குவதே நீதிமன்றங்களின் முன்னுரிமை செயற்பாடாக அமையும்.

வழக்குகள் திறந்த நீதிமன்றங்களில் எடுக்கப்படாது என்பதால், சட்டத்தரணிகளின் பிரசன்னம் தேவையில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏப்ரல் 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் பிணை மனுக்களை ஆராய விடுமுறை நீதிமன்றமாக கூடவுள்ளது என அறியமுடிகின்றது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்