Fri. May 17th, 2024

நாத்திகமும் மூட நம்பிக்கையும் (ஈழத்) தமிழினமும்..

நாத்திகம் பேசுவது என்பது ஈழத்தில் மிகவும் அரிதாக காணப்படும் ஒன்று. பல்வேறு இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்  பொழுது நாத்திக கருத்துக்கள் தமிழ் நாட்டில் மிகவும் அதிகமாக வேரூன்றி உள்ளது. பொதுவாக மேலைத்தேய நாடுகளை ஒப்பிடுவோமானால், அவர்களிடத்தில் கடவுள் நம்பிக்கை என்பது வெறும்  அரிதாகவே உள்ளது. மேலைத்தேய நாடுகளின் எழுத்தறிவு வீதம் 100% க்கு கிட்ட உள்ளது. தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்  பொழுது ஈழத்தின் எழுத்தறிவு வீதம் சற்று அதிகமாகவே உள்ளது. இருந்த போதிலும் கடவுள் மறுப்பு அல்லது நாத்திகம் என்பது மிக அரிதாகவே உள்ளது. இதற்கு பெரியாரின் நாத்திக கொள்கை பரப்பு முக்கிய காரணமாகும் என்றே எண்ண  தோன்றுகின்றது. பெரியார் சாதி மறுப்பு மற்றும் கடவுள் மறுப்பு கொள்கையை கையாண்டு குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் கண்டார். அவரின் கொள்கையை பற்றிக்கொண்ட திராவிட மற்றும் பெரியார் இயக்கங்களின் வளர்ச்சியும் தமிழ் நாட்டில் கடவுள் மறுப்பு கொள்கையை ஆழமாக வேர் உண்றுவதற்கு காரணமாகிவிட்டன. ஆனாலும் இந்த பெரியாரின் கொள்கைகள் ஈழத்தில் பரவாமல் போனது துரதிஸ்ட்மே.

தமிழ் நாட்டில் சாதிய கோட்பாடுகள் ஆழமாக வேர் ஊன்றியுள்ளது. பிராமணர்களின் ஆதிக்கமும்  அவர்களின் அடக்குமுறைக்கு எதிரான எழுச்சியும் கடவுள் எதிர்ப்பு கொள்ளகைக்கு ஊன்று கோலாக அமைந்தது. ஈழத்தை எடுத்து கொண்டால் பிராமணர்களின் ஆதிக்கம் என்பது அங்கு இருக்கவில்லை. தமிநாட்டுடன் ஒப்பிடும் பொழுது சாதிய  அடக்கு முறைகள் அங்கு மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இதனால் தான் நாத்திகம் என்பது ஈழத்தில் அறியப்படாத அல்லது அவசிய படாத ஒன்றாக போய்விட்டது.

தமிழ் நாட்டில் இருக்கும் இன்றய தலைமுறையில் 80% சதவீத மக்களுக்கு தேவாரம் என்றும் சொன்னால் என்னவென்றே தெரியாது. சென்னையில போலீஸ் கமிஷனராக இருந்த தேவராமா என்றுதான்  கேட்பார்கள். இந்த விடயத்தை ஈழத்து மக்களுக்கு சொன்னால் அவர்கள் அதை நம்பமாட்டார்கள். அங்கே இருந்து தான் எங்களுக்கே வந்தது, அவங்களுக்கு தெரியாமலா இருக்கும் என்று தான் சொல்லுவார்கள்.  ஆனால் ஈழத்தில் உள்ள 3 வயது குழந்தைக்கும் குறைந்தது மூன்று தேவாரம் தெரியும். இது மட்டுமல்ல இன்றைக்கு புலம் பெயர்ந்த தேசத்தில இருக்கின்ற அரைவாசி   தமிழ் குழைந்தைகளுக்கே தேவாரம் தெரியும். இன்றும் ஈழத்தில் சிதம்பரத்துக்கு எழுதி வைத்துள்ள சொத்துக்கள் ஈழம் பூராவும் பரவி இருக்கிறது.

விடுதலை புலிகளின் காலத்தில் கூட சாதிய எதிர்ப்பு அறிவுறுத்தபட்டதே ஒழிய கடவுள் எதிர்ப்பு என்பது துளியளவும் இருக்கவில்லை. புலம்பெயர் தேசங்களில் கடவுள் வழிபாடு மேலோங்குவதற்கு அவர்களும் ஓரு காரணமாக இருந்தார்கள்.

இன்று ஈழத்தில் இருக்கும் நிலைக்கு, சட்ட ஒழுங்குகளை விட கடவுள் மீது இருக்கும் சில பல பயம்தான் ( பயபக்தி ) குற்றசெயல்களை ஓரளவுக்கு ஏனும் குறைக்க உதவுகின்றது . இதை இங்கு எழுதுவதன் நோக்கம் ஈழத்தில் கடவுள் மறுப்பை பரப்பவேண்டும் என்ற நோக்கத்தில் இல்லை.   ஆனால் மூட நம்பிக்கைக்கு சில கடிவாளங்களை இதன் மூலம் ஏற்படுத்த வேண்டும் என்ற நப்பாசையில் தான்.

இங்கு இந்து மதத்தை மட்டும் குறைகூற முயற்சிக்கவில்லை.

கிறிஸ்தவர்களை எடுத்துக்கொண்டால்கூட அவர்களும் மேற்கத்திய மக்களுடன் ஓப்பிடுகையில் தேவாலயமே கதி என்று இருக்கிறார்கள். உதாரணத்துக்கு இயேசுபிரான் பிறந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இங்கு மக்கள் இரவிரவாக தேவாலயத்தில் நடக்கும் வழிபாடுகளில் தம்மை ஈடுபடுத்தி கொள்ளவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு அநேகமான கிறிஸ்தவ மக்கள் தேவாலயத்திலேயே இருப்பார்கள். இந்த வழக்கம் இத்தாலி போன்ற நாடுகளில் குறைந்தளவில் கடைபிடிக்கபட்டாலும், அநேகமான மேற்கத்தியநாடுகளில் மக்கள் குடும்பங்களுடன் காளியாட்ட  கொண்டங்களில் ஈடுபடுவார்கள். இலங்கயில் கிறிஸ்தவர்கள் 12 மணிக்கு ஆராதனையில் இருக்கும் பொழுது, அநேகமான மேலைத்தேய நாட்டுமக்கள் முழு மதுபோதையில் இருப்பார்கள். இத்தனைக்கும் அவர்களின் வாழ்க்கைத்தரம் எங்களுடன் ஒப்பிடும் போது எத்தனையோ மடங்கு சிறந்து விளங்குகின்றது. கடவுள் அவர்கள் போதையில் இருந்தால்கூட நல்ல அருள் வழங்கி அவர்களை நல்ல வாழ்கைதரத்துடன் இருக்க அருள்பாலிக்கின்றார் என்று தான் எண்ணதோன்றுகின்றது.

எங்க ஊரில்  கந்தசட்டி, நவராத்திரி விரதம் என்றால் அநேகமான மக்கள் கடும் விரதம் இருப்பார்கள். அநேகமான மக்கள் ஒரு  வேளை சாப்பாட்டுடன் விரதம் இருப்பார்கள். சிலரோ மூன்று மிளகும் உள்ளங்கை தண்ணியும் என்று கடும் விரதம் இருப்பார்கள். மருத்துவம் சொல்கிறது நிறைய தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமான சிறுநீரகத்துக்கும், இரத்த அழுத்தத்தை சீராக பேணுவதற்க்கும் முக்கியம் என்று. இப்படி நான்குமுறை கந்தசட்டி விரதம் இருந்து,  எங்கள் ஊரில் உள்ள அதிக அளவு கிருமிநாசினியால் மாசடைந்த நீரை குடித்தால்  சிறுநீரங்கள் தான் செயல் இழக்கும்.

இதன் விளைவை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்றால் இதனை கண்கூடாக பார்க்கலாம்…

சற்று பொறுத்திருங்கள் இன்னும் பார்க்கலாம்.. பேசலாம்..

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்