Fri. May 17th, 2024

நவம்பர் 11 முதல் சென்னை -யாழ்ப்பாணம் விமானசேவை

சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையிலான ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமான சேவை நவம்பர் 11 முதல் செயல்படத் தொடங்கவிருக்கிறது . நேரடி விமானங்கள் வாரத்தில் மூன்று முறை திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும்.

சென்னையிலிருந்து 9I 101 இலக்க விமானம் காலை 10.35 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாணத்திற்கு வந்து சேரும். யாழ்ப்பாணதிலிருந்து 9I 102 இலக்க விமானம் பிற்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.10 மணிக்கு சென்னை அடையும் என்று அலையன்ஸ் ஏர் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 17 ஆம் தேதி முதல் விமானத்துடன் தொடங்கப்பட்ட நேரடி விமான சேவை ஆரம்பத்தில் நவம்பர் 1 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டது. இரு நாடுகளுக்கிடையில் சில சம்பிரதாயங்கள் முடிக்கப்பட வேண்டியிருப்பதால் தாமதம் ஏற்பட்டதாக ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்தனர்.

சர்வதேச சிவில் விமானங்களுக்காக யாழ்ப்பாண விமான நிலையம் திறக்கப்படுவது கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் போக்குவரத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் இலங்கை தலைநகரத்திற்கு கிட்டத்தட்ட எட்டு மணி நேர பயணத்தை மேற்கொள்ளாமல் தற்பொழுது வெளிநாடுகளுக்கு செல்ல முடியும்.

அதிக கேள்வி மற்றும் தேவை காரணமாக இந்த பாதை தேர்வு செய்யப்பட்டதாக ஏர் இந்தியா தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஸ்வானி லோகானி தெரிவித்தார். இது தொடர்ந்து நன்றாக இயங்குவதுடன் இதற்கான மேலதிக தேவை இருக்குமிடத்து , நாளொன்றுக்கு ஒரு விமானசேவை என்ற விகிதத்தில் அதிகரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்
சென்னை-யாழ்ப்பாணத்துக்கான ஒரு வழி டிக்கெட்டின் விலை இந்தியா ரூபா 3,990 மற்றும் மேலதிக கட்டணம் வரி உள்ளடக்கப்படும், அதே சமயம் யாழ்ப்பாணம்-சென்னை டிக்கெட்டுக்கு 45 அமெரிக்கா டாலர் மற்றும் மேலதிக கட்டணம் மற்றும் வரி விதிக்கப்படும் என்றும் அலையன்ஸ் ஏர் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்