Mon. Jul 1st, 2024

தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால்13 இலட்சம் ரூபா செலவில் அறநெறி பாடசாலைக்கான கட்டடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது. 

தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால்13 இலட்சம் ரூபா செலவில் அறநெறி பாடசாலைக்கான கட்டடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா வெங்கல சட்டிக்குளம் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட  கணேசபுரம் கிராமத்தின் சிறி சித்தி விநாயகர் அறநெறி பாடசாலை நிர்வாகத்திடம் இந்த கட்டடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சிறி சித்திவிநாயகர் அறநெறி பாடசாலை மாணவர்களின்  தலைவர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர்  கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் சிறி சித்தி விநாயகர் அறநெறி பாடசாலைக்கான கட்டட கல்வெட்டினை திரை நீக்கம் செய்து வைத்து கட்டிடத்தையும்  நாடா வெட்டி திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் சந்நிதியன்  ஆச்சிரம  முதல்வர் கலாநிதி. மோகனதாஸ் சுவாமிகள், சமூக செயற்பாட்டாளர் தயாபரன், வெங்கல செட்டிக்குளம் இந்து கலாசார உத்தியோகத்தர் சி.கஜேந்திரகுமார்,
மற்றும் வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்தை சேர்ந்த ம.சுஜேந்திரன், கணேசபுரம் கிராம அமைப்புக்களின் நிர்வாகிகள், அறநெறி பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்