Wed. Jun 26th, 2024

தேசிய மட்ட ஸ்ராண்டற் சையிக்கிள் ஓட்டத்தில் வடமாகாண அணியினர் சம்பியன்

தேசிய மட்ட ஸ்ராண்டற் சையிக்கிள் ஓட்டத்தில் வடமாகாண அணியினர் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

தேசிய மட்ட பெண்களுக்கான 80 கிலோ மீட்டர் கொண்ட ஸ்ராண்டற் சையிக்கிள் ஓட்ட போட்டிகள் பதுளை மையங்கனையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
இதில் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்த யாழ் மாவட்ட வீராங்கனைகளான பி.தனுசுயந்தினி, ஜெ.தர்மிலாரஷி, எஸ்.ரெஜீனா ஆகியோரும் முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனை என்.ராதிகா ஆகியோரும் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்து சாதனை படைத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்