Mon. Jul 1st, 2024

தேசிய மட்ட கோலூன்றி பாய்தல் யாழ் மங்கை தக்சிகா புதிய சாதனை

தேசிய மட்ட பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்த யாழ் பல்கலைக்கழக மாணவி நேசராசா தக்சிகா புதிய சாதனையை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
அகில இலங்கை தேசிய மட்ட தடகள போட்டிகள் தியகம மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்த யாழ் பல்கலைக்கழக மாணவியான நேசராசா தக்சிகா 3.72 மீற்றர் பாய்ந்து புதிய சாதனையை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். 2022ம் ஆண்டு இராணுவ வீராங்கனை சச்சினி பெரேரா 3.71
மீற்றர் பாய்ந்த உயரத்தை ஒரு சென்ரி மீற்றர் அதிகம் பாய்ந்து இந்த சாதனையை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்