Tue. Jun 18th, 2024

தாளையடியில் கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் 135 kg கேரள கஞ்சா இன்று அதிகாலை 4:45 மணியளவில்  மீட்கப்பட்டுள்ளது.
கஞ்ச கடத்தல் இடம் பெறுவதாக கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த  தகவலிற்கு  அமைவாக  வெற்றிலைக்கேணி கடற்படை, மற்றும் சிறப்பு அதிரடி படையினர்  இணைந்து தாளையடி பகுதியில் தேடுதல் நடாத்தியுள்ளனர்.
இதில்  135 கிலோ எடையுள்ள 03 கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றிய வெற்றிலைக்கேணி  கடற்படை, மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த கஞ்சாவை பொதிகளை  மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக  மருதங்கேணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்