Thu. May 16th, 2024

தனது மனைவியின் அரச பட்டங்களைப் பறித்தார் தாய்லாந்து மன்னர்

தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்ன் தனது மனைவி விசுவாசமற்றவராக உள்ளார் எனவும் அரசியாக வேண்டுமென்ற இலட்சியத்தைக் கொண்டுள்ளார் எனவும் குற்றம் சுமத்தி அவரது அரச பட்டங்களை நேற்றுமுன்தினம் பறித்துள்ளார்.

புதிய மன்னராக வஜிரலோங்கோர்ன் 2016 ஆம் ஆண்டில் தனது தந்தையின் மறைவுக்கு பின் பொறுப்பேற்று கொண்டார்.தாய்லாந்து அரச குடும்பத்தில் 10 ஆவது ராமா என மன்னர் வஜிரலோங்கோர்ன் அழைக்கப்படுகிறார்

 

67 வயதான மன்னர் வஜிரலோங்கோர்ன், தனது மெய்ப்பாதுகாவல் படையின் தளபதியான சுதீடா திட்தாய் எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்;.


தாய் எயார்வேஸ் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றிய சுஜிதா திட்ஜாய் பின்னர் மன்னரின் பாதுகாப்பு பிரிவில் அதிகாரியாக பணியாற்றினார்.தற்போது 41 வயதான சுதீடா விமானி, பரசூட் வீராங்கனை, தாதி என பன்முகத் தன்மைகளைக் கொண்டவர் தனது மெய்ப்பாதுகாவல் படையின் தளபதியாக அவரை மன்னர் வஜிரலோங்கோர்ன் நியமித்தார்.

 

மன்னருக்கும் சுஜிதா திட்ஜாய்க்கும் காதல் ஏற்பட்டதையடுத்து கடந்த மே மாதம் அவரை மன்னர் வஜிரலோங்கோர்ன்; திருமணம் செய்தார். மன்னர் வஜிரலோங்கோர்ன் ஏற்கெனவே 3 தடவைகள் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர் என்பதும் அவருக்கு 7 பிள்ளைகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சுதீடா, தனது சொந்த நலனுக்காக தனது அதிகாரப்பூர்வ மனைவி, நாட்டின் ராணியின் மதிப்பை குறைக்க முயற்சிப்பதாக மன்னர் வஜிரலோங்கோர்ன் குற்றம் சாட்டி உள்ளார். மன்னருக்கு விசுவாசமாக இல்லாதமை மற்றும் ராணிக்கு சமமாக நடந்து கொள்ள முயன்றது ஆகிய காரணங்களுக்காக அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்