Wed. May 15th, 2024

டொலருக்காக விபச்சாரத்தில் இறங்கிய இலங்கை , கருப்பு பணத்தை வெள்ளையாக்க தயார்

அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான பண்டுல குணவர்தன நேற்று, வெளிநாட்டிலுள்ள கணக்குகளை பராமரிக்கும் இலங்கையர்கள், வெளிநாட்டினர் இலங்கையர்கள் மற்றும் உள்ளூர் அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ‘கறுப்புப் பணம்’ உள்ளிட்ட எந்தவொரு வெளிநாட்டு நாணயங்களையும் சிறப்பு டெபாசிட் கணக்கில் (எஸ்.டி.ஏ) எந்தவொரு இலங்கையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியிலும் டெபாசிட் செய்யலாம் என்று கூறினார்.
இந்த கருத்து உண்மையில் இலங்கை அரசாங்கத்தின் கருத்தாக இருக்கும் பட்ஷத்தில் இது ஒரு பாரதூரமான விடயமாகவிருக்கும் என்றும் , இதன் மூலம் ஒரு அரசாங்கமே பணசலவை சட்டத்தில் சிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. கருப்பு பணத்தை வெள்ளை பணமாக்க ஒரு அரசாங்கமே முன்வருவது சட்ட ரீதியற்ற செல்பாடுகளுக்கு அரசாங்கமே துணை போவதாக அமையும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இது ஒரு அரசாங்கமே விபச்சார நடவடிக்கையில் இறங்கியதற்கு சமம் என்று மதியவங்கியின் பெயர்குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கருது தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

எந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கமும் இவ்வாறான கோரிக்கையை இது மாதிரி முன்வைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் இலங்கை மீது நாணயமாற்று தடை உட்பட பல்வேறு தடைகளை கொண்டுவரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்