Tue. Jun 18th, 2024

ஜோன் ஹாபட் தடகளம் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி பதக்க வேட்டை

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் ஹாபட் தடகள போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவர்கள் தமது சாதனைகளைப் பதிவு செய்தனர்.
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் ஹாபட் தடகள போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி இரு முதலிடங்கள், எட்டு இரண்டாமிடங்கள், ஒரு மூன்றாம் இடம் உட்பட 11 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
இதில் 15வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில்
ரி.ஆரதி   உயரம் பாய்தல் போட்டியில்  1ம் இடத்தையும், 80 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் 2ம் இடத்தையும், பி.பிரசாலினி தட்டு எறிதல் போட்டியில்  2ம் இடத்தையும், 4*100 மீற்றர் அஞ்சல் ஓட்டம் மற்றும் 4*400 மீற்றர் அஞ்சல் ஓட்டம் என்பவற்றில் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.
13வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் கெவின்லீதன் 100 மீற்றர் ஓட்டத்தில் 3ம் இடத்தையும், பிரவீன் உயரம் பாய்தல் போட்டியில் 2ம் இடத்தையும் பெற்றனர்.
14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் கிருத்திகன் நீளம் பாய்தல் போட்டியில் 1ம் இடத்தையும், கபிஷன் 200 மீற்றர் ஓட்டத்தில் 2ம் இடத்தையும் பெற்றனர்.
15 வயதிற்கு உட்பட்ட பிரிவில் கவிஷன் 400 மீற்றர் ஓட்டம் மற்றும் 100 மீற்றர் ஓட்டம் என்பவற்றில் 2ம் இடத்தையும் பெற்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்