Sun. May 19th, 2024

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள: தமிழ் காட்சிகள் ஒன்றிணைய வேண்டும்!! -சுரேஸ் பிரேமச்சந்திரன்-

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த பொதுவான உடன்பாட்டுக்கு வர வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் இனத்தின் விடுவிக்க இந்த முடிவு எட்டப்படுவது காலத்தின் கட்டாயம் என்றும் சுட்டிக்காட்டினார்.

யாழ்.கட்டப்பிராயிலுள்ள அவரது வீட்டில் இன்று மாலை நடந்த ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

ஐனாதிபதித் தேர்தல் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதில் சில கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்திருக்கின்ற நிலையில் இன்னும் சல கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்காத நிலை காணப்படுகின்றது.

இவ்வாறு ஐனாதிபதித் தேர்தலுக்காக கட்சிகள் மும்முரமாகச் செயற்பட்டு வருகின்ற நிலையில் அடுத்த ஐனாதிபதியைத் தெரிவு செய்வதில் பலமுனைப் போட்டிகள் ஏற்படவுள்ளது.

ஆகையினால் சிங்கள வாக்குகள் பிரிந்து செல்கின்ற நிலையில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் வாக்குககள் மிகப் பிரதான பங்கு வகிக்கப் போகின்றன.

ஆகையினால் தமிழர் தரப்பு இதனைச் சரியான வகையில் கையாள வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. ஏனெனில் கடந்த காலங்களில் ஐனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு வந்தவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று தமிழ்த் தரப்புக்களே கூறுகின்ற நிலையில் இந்த முறை சரியானதொரு தீர்மானத்தை எடுத்து தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, பொளத்தமயமாக்கலை நிறுத்துதல் உட்பட இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயங்களை ஐனாதிபதி தீர்க்கக் கூடியதாக இருக்கும்.

ஆகவே இந்த விடயங்களை முன்னிலைப்பாடுத்தி தமிழர் தரப்பில் இருக்கின்ற தமிழ்த் தேசியக் கட்சிகளான ஈபிஆர்எல்எப், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் மூன்னணி ஆகியன ஒருமித்த பொதுவான முடிவிற்கு வர வேண்டும்.

ஆவ்வாறு தமிழக் கட்சிகள் ஒருமித்த முடிவை மேற்படி பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கின்றவர்களுக்கே ஆதரவு என்ற ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும். அவ்வாறு ஒரு உட்பான்டை தமிழ்க் கட்சிகளுக்கிடையே ஏற்படுத்தி அதனை போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்வைத்து பேச்சுவார்த்தைகளை நடாத்த வேண்டும். அவ்வாறு இணைந்து செயற்படுவதே இனத்தின் நலனுக்கு சிறந்தது.

அதனைவிடுத்து தனித்தனியாக முடிவெடுத்துச் செயற்படுவோமாக இருந்தால் அது பல பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இந்த விடயத்தில் அனைவரும் சிந்தித்து இனத்தின் நன்மைக்காக ஒருமித்துச் செயற்பட வேண்டுமென்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்