Fri. May 17th, 2024

ஜனாதிபதியின் வேண்டுகோளையும் உதாசீனம் செய்து யாழில் கடன் அறவிடும் நிறுவனங்கள்

நாட்டில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள மாதங்களில் தனியார் நிறுவனங்களில் கொடுக்கப்பட்ட கடன்கள் வட்டிகள் எடுப்பதை நிறுத்துமாறு ஜனாதிபதி அவர்களின் அமைச்சினால் சுற்றுநிறுபம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வங்கிகள் தனியார் டீசிங் கம்பெனிகள் வடமராட்சி பகுதியில் உள்ள மக்களிடம் வீடு வீடாகச் சென்று கடனை அறவிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.  மக்கள் தங்களுடைய வாழ்க்கை செலவை சமாளிக்க முடியாத நிலையிலும் வருமானம் இல்லாத குடும்பச் சுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  இந்த நிலையில் எடுத்த கடனை திருப்பி கட்டுமாறு வீடு வீடாகச் சென்று வற்புறுத்தி வருகிறார்கள். அரச தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டியவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

ஜனாதிபதியின் அறிவித்தலுக்கு பின்னர் ஆறுதல் அடைந்திருந்த மக்களுக்கு நிதி நிறுவனங்களின் நடவடிக்கை பலத்த ஏமாற்றம் ஆக அமைந்துள்ளது.  ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய  மக்களிடமிருந்து கடன் அறவிடுவதை நிறுத்திக் கொள்ளுவர்களா அல்லது நாட்டின் ஜனாதிபதியின் வேண்டுகோளை உதாசீனம் செய்து தொடர்ந்தும் கடன் அறவிடும் முயற்சியில் தொடர்வார்களா என மக்கள் அங்கலாய்த்த வண்ணமுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்