Fri. May 17th, 2024

சைவ உணவுமட்டும் சாப்பிட்டால் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம்- புதிய ஆய்வு தகவல்

சைவ உணவுகளை உண்ணும் நபர்களுக்கு இதய நோய் தாக்கம் குறைவு என்றும் ஆனால் பக்கவாத நோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக ஒரு பெரிய ஆய்வுதகவல்கள் தெரிவிக்கிறது.

பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சியில் , 48,000 பேரை 18 ஆண்டுகள் வரை அவதானித்து வந்துள்ளார்கள்.

இருப்பினும் இந்த ஆய்வின் முடிவு அவர்களின் உணவில் மட்டும் தங்கி உள்ளதா அல்லது அவர்களின் வாழ்க்கை முறையின் வேறு ஏதேனும் அம்சமா என்பதை 100% நிரூபிக்க முடியாதுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தார்கள் .

மக்களின் உணவு தேர்வு எதுவாக இருந்தாலும், பரந்த அளவிலான உணவுகளை சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று உணவு நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல எந்த உணவாக இருந்தாலும் அளவுடன் எடுத்து பறந்துபட்ட ரீதியில் சாப்பாட்டு தெரிவு இருப்பது அவசியம்

1993 மற்றும் 2001 க்கு இடையில் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பாதி பேர் இறைச்சி சாப்பிடுபவர்கள், வெறும் 16,000 பேர் மட்டும் சைவ உணவு உண்பவர்கள், 7,500 பேர் தங்களை பெஸ்கேட்டரியன் (மீன் உண்ணும்) என்று கூறினார்

2010 ஆம் ஆண்டில் அவர்களை ஆய்வு செய்தபோது அவர்களின் உணவு முறைகள் குறித்து அவர்களிடம் கேட்கப்பட்டது. மேலும் அவர்களின் மருத்துவ வரலாறு, புகைத்தல் மற்றும் உடல் செயல்பாடு ஆகியவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன,

ஒட்டுமொத்தமாக, குரோனரி இதய நோய் 2,820 பேருக்கும் , 1,072 பேருக்கு பக்கவாதமும் (இதில் 300 பேருக்கு மூளையினுள் ரத்தக்கசிவு ) ஏற்பட்ட்து . இந்த இரத்த கசிவானது பலவீனமான இரத்த நாளங்கள் வெடித்து மூளைக்குள் இரத்தம் வரும்போது நிகழ்கிறது.

இறைச்சி சாப்பிடுபவர்களை விட பெஸ்கேட்டரியர்களுக்கு ( மீன் சாப்பிடுபவர்கள் ) இதய நோய் தாக்கம் 13% குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதுடன் , சைவ உணவு உண்பவர்களுக்கு அது 22% குறைவான ஆபத்தாகவும் இருந்தது

 

ஆனால் தாவர அடிப்படையிலான உணவுகளை உண்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட 20% அதிக ஆபத்து இருந்தது. தாவர அடிப்படையிலான உணவுகளில் வைட்டமின் பி12 குறைவாக இருப்பதால் , பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை வைட்டமின் பி 12 அளவுகளுடன் தொடர்புபடுத்தப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்தனர், ஆனால் இதனைபற்றி ஆராய கூடுதல் ஆய்வுகள் தேவை என்றார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்