Thu. May 16th, 2024

சுவிஸ் போதகரும் அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பும் சமூக வலைத்தளங்களில் உலாவரும் தகவல்

சுவீஸ் போதகர் சுவீசிலிருந்து கொழும்பு வந்தது #மார்ச்_10

அவர் யாழ்ப்பாணத்தில் முதலாவது நிகழ்ச்சியில் பங்கு பற்றியது #மார்ச்_11

கொரனாவை குணப்படுத்த என்று சொல்லி கூட்டம் வைத்தது #மார்ச்_15

அவர் திரும்பி போக இருந்த திகதி #மார்ச்_26

ஆனால் அவர் திரும்பி போன திகதி #மார்ச்_17

அவசரமாக பிசினெஸ் கிளாஸ் இல் புக் பண்ணி திரும்பி போனதற்கான காரணம் கடும் காய்ச்சல் மற்றும் இருமல்

இலங்கையில் முதலாவது கொரனா தொற்றுகை ஏற்பட்டதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள் #மார்ச்_11

சுவீஸ் போன போதகர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் . அன்றே அவருக்கு கொரனா இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது . அதாவது #மார்ச்_18

அவருக்கு கொரனா இருப்பதாகவும் அவர் நலமுடன் திரும்ப தேவனை வேண்ட சொல்லி யாழ்ப்பாண #பிலதெனியா சபையினரில் சிலர் பதிவுகள் போட்டது #மார்ச்_19 இரவு மற்றும் #மார்ச்_20 காலை

போதகருக்கு கொரனா இருக்கு அவருடன் பழகியவர்களை தனிமைபடுத்த வேண்டும் என்று சமூக வலை தளங்களில் பதிவுகள் வர ஆரம்பித்தது #மார்ச்_20 பின்னேரம் மற்றும் #மார்ச்21

போதகரை காப்பாற்ற தேவனை வேண்ட சொல்லி சமுக வலை தளத்தில் போட்ட அத்தனை பதிவுகளையும் குறிப்பிட்ட சபையினர் அழித்தது #மார்ச்21 மாலையில்

போதகருக்கு கொரனாவே இல்லை என்று அதே குறிப்பிட்ட சபையினர் பதிவுகள் மற்றும் கருத்துக்கள் போட ஆரம்பித்தது #மார்ச்21

மாவட்ட சுகாதார அதிகாரிகள் ஆரம்ப கட்டநடவடிக்கை எடுக்க வெளிக்கிட்டது #மார்ச்_21 மாலையில்

அதே நேரம் போதகருக்கு கொரனா இருக்கிறதா ? இல்லையா ? என்று இன்னமும் உறுதிப்படுத்தவில்லை என்றும் மக்கள் பயப்பட தேவையில்லை என்றும் யாழ் மாவட்ட போதனா வைத்தியசாலை நிர்வாகி அறிக்கை விட்டது #மார்ச்_21 மதியம்

போதகருக்கு கொரனா இருக்கா இல்லையா என்று அறிவதற்கு ஐந்து நிமிடம் போதுமானது . உத்தியோகபூர்வமாக வைத்தியசாலையில் இருந்து call பண்ணி கதைத்திருந்தால் ஐந்து நிமிடத்தில் உறுதிப்படுத்தி இருக்கலாம்

ஆனால் வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் சுகாதார திணைக்களம் ஆகியன போதகருக்கு கொரனா இருக்கு என்று உத்தியோகபூர்வமாக உறுதிப்டுத்தியது #மார்ச்_22 மாலை . அன்றே போதகரோடு பழகியவர்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது

குறிப்பிட்ட கிராமத்தவர்கள் கிராமத்திலும் , போதகருடன் நெருக்கமாக பழகியவர்கள் பலாலி இராணுவ முகாமிலும் தனிமைப்படுத்தப்பட்ட பின் வடக்கு மாகாணத்துக்கு ஊரடங்கு சட்டமும் போடப்பட்டது

யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நாள் மார்ச்22

போதகரால் தான் இவருக்கு தொற்று வந்திருக்கும் என்று பலர் வாதங்களை முன் வைத்த போது , இல்லை இல்லை குறிப்பிட்ட நபர் பலரோடு பழகுறவர் போதகரால் அவருக்கு வந்திருக்க வாய்ப்பில்லை ஏனெனில் போதகருடன் நெருக்கமாக பழகியவர்களுக்கு இன்னமும் வரவில்லை என்று சொல்லி வாதங்களை முன் வைத்து கதைத்தவர்கள் அதே சபையை சேர்ந்தவர்களும் மற்றும் யோ புரட்சி என்கிற இலக்கிய பரப்பில் இயங்குறவரும் .இவை நடந்தது #மார்ச்25 மற்றும் மார்ச் 26

போதகருடன் நெருக்கமாக பழகியவர்களில் மேலும் இருவருக்கு கொரனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது #ஏப்ரல்_1

14 நாளுக்கு பிறகும் கொரனா தொற்று ஏற்படுமா ? என்ற கேள்விகளுடன் களமாட தயாராக இருக்கும் நாள் இன்று இன்றய திகதி #ஏப்ரல்2

மார்ச் 15 இல் கடுமையான காய்ச்சலை உணர்ந்த போதகர் தனது காய்ச்சலை உள்ளூர் வைத்தியர் ஒருவரிடம் காட்டலையா ??

மார்ச் 11 இல் கொரனா இருப்பதை உறுதி செய்த இலங்கை அரசு அதுபற்றிய தீவிர நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பித்து இருந்தும் மார்ச் 15 – 16 களில் போதகருக்கு ஏற்பட்ட காய்ச்சலை பார்த்த உள்ளூர் வைத்தியர் அது கொரனவா இருக்கலாம் என்று சந்தேகிக்காதது ஏன் ??

சொந்தக்காரர் என்பதாலா ??

சொந்த காரரை காப்பாற்ற உண்மையை மறைத்த அந்த வைத்தியர் , உண்மைகள் தெரிந்தும் மூடி மறைக்க முற்பட்ட அந்த சபையினர் , உண்மைகள் தெரிந்த்தும் மக்கள்ளுக்கு விழ்ப்புணர்வூட்ட தவறிய அத்தனைபேரும்
நடக்க இருக்கும் பேரழிவுக்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் ஆவார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்