Tue. May 21st, 2024

சுகாதார அமைச்சு மக்களுக்கு விடும் அவசர எச்சரிக்கை!!

சுகாதார அமைச்சு நாட்டு மக்களுக்கான அவசர எச்சரின்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை விடுத்துள்ளது.

குறிப்பபாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் அஸ்பிரின், புருபன், டைக்கிலோபெனாக், சோடியம், மெபனமிக் அசிட் மற்றும் இந்த வகையினைச் சேரந்த ஸ்ரிறொயிட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் ஸ்ரிரொயிட் வகையினைச் சேர்ந்த மருந்துகளைப் பயன்படுத்தக் வேண்டாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது பல மாவட்டங்களில் டெங்கு நோயின் தாக்கமானது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காரணமாக கொழும்பு கம்பஹா,களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இந்நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்நிலையில் சில டெங்கு காய்ச்சல் நோயாளிகள் குறிப்பிட்ட சில மருந்துவகைகளைப் பாவித்த காரணத்தால் அவர்களது உடல்நிலை மோசமடைந்ததுடன் அவர்களில் சிலர் உயிரிழந்தும் உள்ளதாக நாட்டின் சில பாகங்களிலிருந்து வைத்திய அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனவே காய்ச்சல் காணப்படும் நோயாளர்கள் மேற்குறிப்பிட்ட மருந்துகளை பாவிக்க வேண்டாம் என சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்கள் காய்ச்சலுக்காகத் தாங்கள் பாவிக்கும் மருந்துகள் குறித்து அறிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்