Mon. May 20th, 2024

சிறுபான்மை இனம் தமக்கான தேசியகீதத்தை உருவாக்க வேண்டும் – பாாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்

 

’இப்போது ஒரு வசதி ஏற்பட்டிருக்கின்றது நாங்கள் இனிமேல் தேசியகீதம் படிக்கத் தேவையில்லை , உங்களுக்கு மொழி தெரிந்தால் படியுங்கள் இல்லையேல் விட்டுவிடுங்கள்.அதற்காக அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும். என்று தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ .சரவணபவன். 28/12/2019  சனிக்கிழமை கைதடி வினாயகர் முன்பள்ளி பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார் .அவர் மேலும் தெரிவிக்கையில்

”அவர்களின் ஊரில் அவர்களின் மொழியில் பேசட்டும், உங்களுடைய ஊரில் மொழி விளங்காமல் ஏன் திணிக்கிறீர்கள்.எனவே அதனை விட்டுவிடுங்கள்.இதைத்தான் நான் சொல்லித்தரலாம். அவர்களாகவே பல விடயங்களை தட்டில் வைத்து தரப்போகிறார்கள் அதில் இந்த தேசிய கீதம் நாங்கள் பாடத்தேவையில்லை என்று அவர்கள் எங்களுக்கு சொல்லியது. அதை நல்ல எண்ணத்தோடு எடுத்துக்கொள்வோம். ஒரு வியாக்கியானமும் தேவையில்லை.

ஒருவேளை அவர்கள் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை சிறுபான்மையினம் தாங்களே ஒரு தேசியகீதத்தை உருவாக்கி படிக்கட்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ தெரியாது. எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு என்ன செய்கிறார்கள் என்று.பார்ப்போம்.

நான் நினைக்கின்றேன் இங்கு சிங்களத்தில் தான் படிக்க வேண்டும் என்றால் அதனை அதிபர்கள் ஊக்குவிக்கக் கூடாது , வடக்கு கிழக்கு அத்தனை அதிபர்களும் அத்தனை அரச திணைக்களங்களும் அடிமைகள் ஆகக் கூடாது .எங்களுடைய முழு உரிமையை பறிக்கும் செயல் இந்த தேசியகீதம் பிரச்சனை,

ஒரு தேசிய இனம் தான் இருக்கின்றது .அதற்கு கட்டுப்படுங்கள் என்று சொல்கிறார்கள், அப்போ நாங்கள் வந்தேறு குடிகள், அடிமைகளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். நாங்கள் இசைந்து போகக் கூடாது. முன்னர் நடந்த விடயங்கள் எல்லாவற்றையும் இந்த அரசாங்கம் மீண்டும் தொடங்கிவைக்கின்றது, 20 வருடங்ளில் என்ன நடக்குமோ தெரியவில்லை” என
உரையாற்றினார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்