Wed. May 15th, 2024

சிம்பிள் .!!! இதை செய்தீங்கன்னா உங்க குட்டீஸ் பாகற்காயையும் சாப்பிடும்..

பல தாய்மார்களுக்கு, நம்ம ஊரு சின்ன பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்டுவதென்பது பெரிய தலைவலியான விஷயம். நல்ல வேளை அப்பாமார்கள் நம்ம நாட்டிலை என்ற படியால் தப்பிச்சாங்கள். இதே மேற்குலக நாடுகளாக இருந்தால் இந்த பிரச்சினை அப்பாமாருக்கும் சேர்த்துதான்.
இதில வேற நம்ம குழந்தைகளுக்கு மரக்கறி மற்றும் பழவகைகளை ஊட்டுவதென்பது பலபேருக்கு எட்டா கனி தான் . இதற்காக தான் நாங்கள் இந்த தகவலை இங்கே உங்களுக்காக இங்கே தருகின்றோம்.. இதை செய்தால் கைமேல் பலன்தான்

முதலில் உங்களின் குழந்தைகள் காய்கறி மற்றும் பழங்கள் சாப்பிட மறுத்தால் , கவலையை விட்டுவிட்டு அவர்களுக்கு விதம் விதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை வழங்குவதைத் தொடருங்கள். ஆனால் அவர்கள் மீது அழுத்தம் கொடுப்பதைத் தவிருங்கள். ஒரு நாளில் அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் அல்லது அவர்கள் சாப்பிடும் நேரத்தில் எல்லாவற்றையும் சாப்பிடுகிறார்களா என்பது பற்றி கவலை படாமல், ஒரு வாரத்தில் அவர்கள் சாப்பிடுவதைப் பற்றி சிந்தியுங்கள் என்று பிரித்தானிய சுகாதார சேவை அமைப்பு NHS அறிவுரை வழங்குகின்றது

 

. நீங்கள் உங்கள் குழந்தை சாப்பிட்டதற்காக அவர்களுக்கு லஞ்சம், உற்சாகம், கைதட்டல் அல்லது சன்மானம், வெகுமதி போன்றவற்றை அளித்தால், அவர்கள் தங்கள் விருப்பப்படி மீண்டும் உணவை சாப்பிடும் தன்மை குறையும். இதேபோன்று இன்னும் சில சுவையான உணவுகளை சாப்பிடக்கூடாது என கட்டுப்படுத்தினால் அல்லது அவற்றை வெகுமதியாகப் பயன்படுத்தினால், உதாரணமாக, அவர்கள் முக்கிய உணவை சாப்பிட்டால் இனிப்பு அல்லது ஐஸ் கிரீம் போன்றவற்றை வழங்கினால், எதிர்காலத்தில் , அவர்களது சுய ஒழுங்குமுறை அல்லது சுய கட்டுப்பாட்டுடன் இருப்பதில் பிரச்சினை ஏற்படும் .

சாப்பிடாததிற்காக ஒரு குழந்தையை தண்டிக்க வேண்டாம், இது எத விதத்திலும் நிலைமையை சீர்செய்யாது , மேலும் அது மோசமாக்கிவிடும். அவர்கள் ஒரு உணவை சாப்பிட மறுத்தால் அல்லது அவர்கள் புதிதாக ஏதாவது சாப்பிட்டால் அவர்களை தண்டிப்பதை தவிருங்கள்

உங்களால் முடிந்தால், அவர்களை காய்கறி தோட்டங்களுக்கோ அல்லது சந்தைகளுக்கோ கூட்டிசெல்லுங்கள் , அல்லது உங்கள் வீட்டில் காய்கறி பழங்களை வீட்டு தோட்டத்தில் வளருங்கள். மேலும் அவர்களுடன் சேர்ந்து ஒன்றாக சமைக்கவும், உணவுடன் விளையாடவும் செய்யுங்கள் – உதாரணமாக, கேரட் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றில் உருவங்கள் செய்து விளையாடுதல். வெவ்வேறு உணவுகளைக் கொண்ட கதை புத்தகங்களைப் படியுங்கள், கார்ட்டூன்களை காய்கறிகளின் படங்களைக் கொண்ட உணவு தட்டுகளை வாங்குங்கள்.

 

அவர்களுடைய உள்ளுணர்வுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் . சாப்பிட்டு முடிந்தவுடன், உங்கள் பிள்ளை பசியுடன் இருப்பதாகச் சொன்னால், அவர்கள் சாப்பிட்டிருந்தாலும் நம்புங்கள் , அவர்கள் பசி இல்லை என்று சொன்னால் கூட அவர்களை நம்புங்கள்.

 

இப்படி எல்லாம் நீங்க செய்வீர்கள் என்றால் கண்டிப்பாக உங்கள் குழந்தை காலப்போக்கில் காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட ஆரம்பிக்கும். அப்படி சாப்பிட்டால் கண்டிப்பாக நியூஸ் தமிழுக்கு திரும்பி வந்து ஒரு லைக் போடுங்க

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்