Sun. May 19th, 2024

சவுதி மீது ஹவுத்தி போராளிகள் ட்ரோன்மூலம் தாக்குதல் , பற்றியெரியும் எண்ணெய் குதங்கள்

ட்ரோன் தாக்குதல்களில் சவூதி அரேபியாவின் அரசுக்கு சொந்தமான நிறுவனமான அரம்கோ நடத்தும் இரண்டு பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் ஏதீப்பிடித்து எரிகின்றன

அரம்கோவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை தளமான அப்காய்கில் முதல் தாக்குதலும் இரண்டாவது ட்ரோன் தாக்குதல் குரைஸ் எண்ணெய் குதத்தையும் தாக்கியதனால் தீப்பற்றி எரிகின்றன

இருந்த போதிலும் இந்த பகுதிகளில் தீ கட்டுப்பாட்டில் உள்ளது சவுதி அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யேமனில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்பான ஹவுதி குழுவினரே இந்த தாக்குதல்களை 10 ட்ரோன்களை கொண்டு நடத்தியுள்ளதாக கூறியுள்ளார்கள்.

ஹவுத்தி இயக்கத்திற்கு சொந்தமான பெய்ரூட்டை தளமாகக் கொண்ட அல் மசிரா டிவியிடம் அதன் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரியா கருது தெரிவிக்கும் பொது இந்த மாதிரியான தாக்குதல்களை எதிர்காலத்தில் மேலும் எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்

சனிக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதல் சவுதி அரேபியாவினுள் ஹவுத்தி படைகள் மேற்கொண்ட மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாகும்.

இந்த தாக்குதல் தொடர்பான மேலதிக விபரங்களை சவுதி அதிகாரிகள் இன்னமும் வெளியிடவில்லை. கடந்த காலங்களில் , ஹவுத்தி படையினர் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களை சவுதி படைகள் வெற்றிகரமாக வானில் வைத்து தாக்கி அழித்திருந்தனர். இந்த நிலையில் புது முயற்சியை ட்ரொன் உதவியின் மூலம் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்