Fri. May 17th, 2024

சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க தமிழரசு கட்சி முடிவு -மத்திய குழு கூடத்தில் தீர்மானம் எடுப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK ) முடிவு செய்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டணியின் (TNA ) முக்கிய கட்சியான தமிழரசு கட்சி 2019 ஜனாதிபதித் தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் என்று அதன் ஊடக செய்தித் தொடர்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் . எம்.எ . சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எஞ்சியிருக்கும் இரு கட்சிகளான டெலோ மற்றும் புளொட்டின் முடிவை கட்சிகளுக்குள் கலந்துரையாடல் மேற்கொள்வதன் மூலம் தெரிவிக்குமாறு தமிழ் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழ் கட்சிகளின் 13 அம்ச கோரிக்கை தொடர்பாக சஜித் பிரேமதாச மற்றும் கோத்தபாய கலந்துரையாட பின்னடித்த நிலையில், கோத்தபாய ராஜபக்ச அதனை பின்னர் தேர்தல் பிரச்சார மேடைகளில் நிராகரித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ் கூட்டமைப்பு வலிய சென்று சஜித்தை ஆதரிதுள்ளது குறிப்பிடத்தக்கது. கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் பின்கதவு உடன்படிக்கை ஒன்று உள்ளதையே இது காட்டுவதாக தெரிகின்றது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்