Thu. May 16th, 2024

கோரோனோ அபாய நேரத்திலும் நெல்லியடி பஸ் நிலையத்தில் அரட்டையடிக்கும் இளைஞர்கள்

ஊரடங்குச் சட்டம் இல்லாத நேரங்களில் நெல்லியடி நகரப் பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் 19 வயதிலிருந்து 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பஸ் நிலையத்தில் போடப்பட்டு இருக்கும் இருக்கைகளில் அமர்ந்திருந்து அரட்டையடித்து வருகிறார்கள். பலமணிநேரம் இருந்த இவர்களை நேற்றையதினம் ராணுவத்தினரும் போலீசாரும் சேர்ந்து இங்கு இருக்கக் கூடாது என அவர்களை அவ்விடத்திலிருந்து அகற்றினார்கள்.வீட்டிலிருந்தே கோரோனோ தொற்று அபாயம் உள்ளநிலையில் நெல்லியடி நகருக்கு வரும் இளைஞர்கள் நெல்லியடி பஸ் நிலையத்தை பொழுதுபோக்காக நினைக்கின்றார்கள். இதனால் பயணிகள் மற்றும் பொது மக்களை கோரோனோ தொற்றும் அபாயத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.  இவர்கள் தொடர்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டால் இவர்கள் கைது செய்யப்படும் நிலையேற்படும் என்று நெல்லியடி பொலிஸார் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பெற்றோர்கள் இது தொடர்பாக கவனம் எடுப்பதில்லை என்றும் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கவலை வெளியிட்டிருந்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்