Sun. May 19th, 2024

கோட்டா அரசுக்கு செக்!! -ஜ.நா அமர்வில் வருகிறது இலங்கை விவகாரம்-

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கான தற்காலிக நிகழ்ச்சி நிரலில் இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது.

2020 பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் 20 மார்ச் மாதம் வரை நடைபெறவிருக்கும் அமர்வின்போது, ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் ஆண்டு அறிக்கை மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் பொதுச்செயலாளரின் அறிக்கைகள் சமர்பிக்கப்படவுள்ளன.

30/1 தீர்மானத்தின் பிரகாரம் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதன் பரிந்துரைகள் மற்றும் பிற செயன்முறை தொடர்பான முன்னேற்றத்தை மதிப்பிடுமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய 40/1 தீர்மானம் தொடர்பாகவும் எழுத்து மூலமான அறிக்கையை வழங்குமாறும் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்