Fri. May 17th, 2024

கொரோனா நோயாளர்கள் யாழில் இல்லை. பரிசோதிப்பதற்கு அஞ்ச வேண்டாம். 

யாழ்.போதனா வைத்திய சாலையில் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது என்ற பிழையான எண்ணத்தால் ஏனைய நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றார்கள்.
இவ்வாறான தயக்கத்தால் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு உரிய நேரத்தில் வருவதற்கு தாமதிப்பதால், சில உயிரிழப்புக்கள் மற்றும் நோய் தீவிரமடையும் நிலை ஏற்பட்டுகின்றது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நாட்டில் கொரோனா வைரஸ் இனங்காணப்பட்ட போது கொழும்பில் உள்ள ஜ.டி.எச் வைத்தியசாலையில் மட்டுமே அதற்கான சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை வழங்கப்பட்டது.
இதன் பின்னர் கொரோனாவின் தீவிரம் அதிகரித்த காரணத்தினால் மேலும் மூன்று வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை விடுதி அமைக்கப்பட்டது.
மேலும் இலங்கையில் 25 வைத்திய சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்படுபவர்களின் மாதிரிகளை பெற்று பரிசோதனைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் யாழ்.போதானா வைத்தியசாலை மற்றும் வவுனியா வைத்திய சாலைகளில் இவ்வாறான நோய் சந்தேகத்துடன் வருபவர்கள் அனுமதிக்கப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றது.
யாழ்.போதனா வைத்திய சாலையில் கடந்த 2 மாதங்களாக கொரேனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வருபவர்களையே தனிமைப்படுத்தி வைத்திருந்து, மாதிரிகளை பெற்று பரிசோதணைக்கு அனுப்பிவைக்கின்றோம்.
பரிசோதணையில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டால், உடனடியாக அவர்கள் கொழும்பு மற்றும் வெலிகந்த சிறப்பு வைத்திய சாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். போதனா வைத்திய சாலையில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை வழங்கப்படுவதில்லை.
யாழ்.போதனா வைத்திய சாலையில் வழமை போன்று பல நோய்களுக்கான சிகிச்சை வழங்கப்படுகின்றன. எனவே பொது மக்கள் அச்சம் கொள்ளாமல் போதனா வைத்திய சாலைக்கு வருகைதந்து தமது வைத்திய தேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்