Wed. May 15th, 2024

கொரோனா தொற்றை தவிர்க்க தெரிந்து கொள்ள வேண்டியவை

அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வியாபார தளங்களுக்கு பிரவேசிக்க சந்தர்ப்பம் கிடைத்தால் தம்முடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பின்வருமாறு தயாராவோம்.
சந்தர்ப்பம் கிடைத்த உடனேயே வியாபார தளங்களுக்கு செல்லாமல் அவசியம் உள்ளதா என நன்கு சிந்தியுங்கள்.
வியாபார தளங்களுக்கு செல்லவும் வெளியே வரவும் முன்பு கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமான பொருட்களின் விபரங்களை தயாரித்து கொள்ளுங்கள். இதனால் வியாபார தளத்தினுள் குறைந்த காலமே செலவாவதுடன் திரும்ப திரும்ப வீட்டில் இருந்து வெளியேறுவதையும் குறைக்க முடியும்.
பொருட்களை வீட்டில் இருந்தே பெற்றுக் கொள்ள கூடிய சகல சந்தர்ப்பங்களிலும் அச்சேவையை பெறுங்கள். இதனால் நீங்கள் பாதுகாப்பு பெறுவதுடன் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன் மட்டுமல்லாது வியாபார தளத்தினுள் உள்ள மக்களின் தொகை குறைவதனால் முழு நாட்டிற்கும் நோய்த்தொற்றை குறைப்பதற்கும் ஏதுவாக அமையும்.
அருகில் உள்ள வியாபார தளத்தை தெரிவு செய்யுங்கள். இதனால் அனாவசியமாக வீட்டில் இருந்து வெளியே இருக்கும் காலத்தை போல போக்குவரத்துக்காக செலவிடும் பணத்தையும் குறைத்துக்கொள்ள முடியும்.
Corona வைரஸ் தொற்றின் சிக்கல் ஏற்படக்கூடிய தொகுதியினரான முதியோர் மற்றும் நீண்ட கால நோய்களுடன் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் வியாபார தளங்களுக்கு செல்வதை முடிந்தளவு குறைத்து கொள்வோம். அவர்களுக்கு அவசியமானவற்றை பெற்றுக்கொவதற்காக முடியுமான சகல வழிகளிலும் உதவி செய்வோம்.
எத்தகைய தொற்றக்கூடிய நோய் நிலைமைக்கும் முகம்கொடுக்க கூடிய சக்தியுள்ள இனமாக எழுந்து நிற்போம்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்