Thu. May 16th, 2024

கொடிகாமம் பொதுச் சந்தை இன்றிலிருந்து வழமையான இடத்தில்

சாவகச்சேரி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கொடிகாமம் பொதுச் சந்தை 26/5/2020 செவ்வாய்க்கிழமையிலிருந்து சந்தை வளாகத்தின் உள்ளே இடம் பெறவுள்ளது என சாவகச்சேரி பிரதேச சபை அறிவித்துள்ளது

வெற்றிலைக்கடை மரக்கறிகள் விற்பனை மீன் விற்பனை தேங்காய் விற்பனை ஆகியவை வழமையான சந்தைக் கட்டடத் தொகுதியின் உள்ளே இடம் பெறும்

பழவகைகள் விற்பனையும் சைக்கிள் தரிப்பு நிலையமும்  சந்தை வீதியிலுள்ள காளி கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் தனியார் காணிக்குள் இடம் பெறும்

எனவே வியாபாரிகளும் பொருள் கொள்வனவு செய்வதற்கு வருவோரும் முகக்கவசம் மற்றும் கையுறைகளைப் பாவித்து ஒரு மீற்றர் தூரத்தில் சமூக இடைவெளியை பேண வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபை அறிவித்துள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்